பெரிய ஆட்ரான் மோதுவி ஆய்வகத்தில், பேரண்டத்தின் கட்டமைப்புத் தொகுதிகளைப் பற்றி அறிவதற்கானப் பணியின் போது, இதுவரை கண்டிராத மூன்று அணுவகத் துகள்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அறிவியலாளர்கள் ஒரு புதிய வகையான "பென்டாக்வார்க்" மற்றும் முதல் இணை "டெட்ராக்வார்க்" ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளனர்.
இதனை ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மன்றமான CERN தெரிவித்துள்ளது.
லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் அல்லது பெரிய ஆட்ரான் மோதுவி என்பது புலப்படாத ‘தெய்வீக துகள்’ அல்லது ஹிக்ஸ் போசான் என்றத் துகளைக் கண்டறிந்த இயந்திரம் ஆகும்.
13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெடிப்புக்குப் பிறகு பேரண்டம் உருவாவதற்கு இது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
இது CERN மன்றத்தில் அமைந்துள்ள 27 கிமீ நீளமுள்ள லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் இயந்திரம் ஆகும்.
இது ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது.
CERN என்பது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அதிகாரப்பூர்வப் பார்வையாளர் தகுதி பெற்ற அமைப்பாகும்.
CERN ஆனது உலகளாவிய வலையமைப்பின் பிறப்பிடமாகவும் உள்ளது.