ஹோலோசீன் காலத்தின் பிற்பகுதியில் ஈலாட் / அகாபா என்ற வளைகுடாவில் பவளப் பாறை வளர்ச்சியில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு இடை நிறுத்தமானது பதிவானதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஈலாட் வளைகுடாவில் உள்ள பவளப்பாறைகள் சுமார் 4,400 முதல் 1,000 ஆண்டுகளுக்கு முன்னதாக அதன் வளர்ச்சியில் 3,000 ஆண்டு கால ‘முடக்கத்தினை’ எதிர் கொண்டு உள்ளது.
உலகம் குளிர்ச்சியடைந்ததால் ஏற்பட்டிருக்கக் கூடிய, கடல் மட்டத்தின் ஒரு தற்காலிக வீழ்ச்சி காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம்.
வளர்ச்சியில் மிக நீண்டதொரு இடைநிறுத்தம் இருந்த போதிலும், பவளப் பாறைகள் அவற்றின் இயற்கையான நெகிழ்தன்மையை வெளிப்படுத்தி ஆழ்கடலில் இருந்து அது மீண்டும் வெளித்தோன்றி இறுதியாக மீண்டும் வளரத் தொடங்கின.
பவளப் பாறைகளின் பன்முகத்தன்மை மற்றும் மிகுதியானது அந்த மிகவும் சிறிய ஒரு இடைவெளிக்கு முன்னும், பின்னும் குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையைக் காட்டியது.