செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் இரும்பு ஆக்சைடு இருப்பதன் காரணமாக செந் நிறத்தில் தோன்றுவதால், "செந்நிறக் கிரகம்" என்று அழைக்கப்படும் இக்கோளைப் பற்றிய ஆய்வு மற்றும் மதிப்பாய்வுகளைக் கொண்டாடுவதை இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் விண்வெளி ஆய்வு வரலாற்றில் 1964 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி அன்று நாசாவின் மரைனர் 4 விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட ஒரு மைல்கல் நிகழ்வை நினைவுகூறுகிறது.
செவ்வாய்க் கிரகத்தில் பறந்து, அந்தக் கிரகத்தின் அருகாமைப் படங்களை அனுப்பிய முதல் வெற்றிகரமான கலம் இதுவாகும்.