உலகின் மிக உயரமான எஃகினால் ஆன வளைவு இரயில் பாலமான செனாப் பாலத்தில் இந்திய இரயில்வே சோதனை ஓட்டத்தை நடத்தி வருகிறது.
இந்த உலகின் மிக உயரமான இரயில் பாலம் ஆனது செனாப் ஆற்றின் மீது 359 மீ (1,178 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இது பாரீசு நகரின் ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிகம் உயரமானது.
இது உதாம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா புதிய இரயில் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப் பட்டது.
இந்தப் பாதையானது, ஜம்மு & காஷ்மீரின் அனந்த்நாக், புல்வாமா, சோபியான், பத்காம், ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைக்கப் பட உள்ளது.