TNPSC Thervupettagam

சென்டாய் கட்டமைப்பு

May 16 , 2019 2022 days 1351 0
  • ஒரு சர்வதேச ஆய்வு அறிக்கையானது பேரிடர் அபாயக் குறைப்பிற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் (United Nations Office for Disaster Risk Reduction - UNDRR) வெளியிடப்பட்டது.
  • இது மிக அதிகமான கால நிலை மாற்றங்களின் காரணமாக புதிய மற்றும் மிகப்பெரிய பிரச்சனைகளை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளது. இது குறிப்பாக ஆசிய பசிபிக் பொருளாதாரங்களை இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
  • பின்வருவனவற்றிலிருந்து மனிதர்களுக்கு அபாயங்கள் நிகழும் என்று இது கூறியுள்ளது.
    • காற்று மாசுபாடு
    • உயிரியல் அபாயங்கள்
    • வெள்ளம், நிலச்சரிவு மற்றும் நில நடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள்.
  • நாடுகள் பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கையில் முதலீடு செய்யாவிட்டால் அதன் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவிகித அளவிற்கு பொருளாதார இழப்புகள் ஏற்படும் என்று இது கணித்துள்ளது.
  • உலகளாவிய மதீப்பீட்டு அறிக்கையானது (GAR - Global Assessment Report) சென்டாய் கட்டமைப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறுகின்றது.
சென்டாய் கட்டமைப்பு
  • இது 2015 ஆம் ஆண்டில் ஐ.நா. உறுப்பு நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இது பேரழிவினால் மரணங்களையும் பொருளாதார இழப்புகளையும் குறைப்பதைப் பற்றி விவரிக்கின்றது.
  • இது முன் எச்சரிக்கை அமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் அபாய நிர்வாகத்தை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்