சென்டி மில்லியனர்களின் அதிகரிப்பு குறித்த உலகின் முதல் உலகளாவிய ஆய்வில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
சென்டி மில்லியனர்கள் என்பது ரூ. 830 கோடிக்கு மேல் (100 மில்லியன் டாலர்) சொத்துக்களைக் கொண்ட நபர்கள் ஆவர்.
உலகிலுள்ள மொத்த 25,490 சென்டி மில்லியனர்களில், ஐக்கியப் பேரரசு, ரஷ்யா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 1132 பேரைக் கொண்டுள்ளது.
2032 ஆம் ஆண்டில், இந்தியா சீனாவை (2வது இடத்தில்) முந்திக் கொண்டு, சென்டி மில்லியனர்களுக்கான மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக விளங்கும்.
38 சதவிகித (9,730) அளவில் உலக மில்லியனர்களைக் கொண்டு அமெரிக்கா 1வது இடத்தில் உள்ளது.
2,021 சென்டி மில்லியனர்களுடன் சீனா, அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் உள்ளது.