TNPSC Thervupettagam

சென்ட்ரம் நிறுவனத்திடம் PMC வங்கின் பொறுப்பு

June 22 , 2021 1254 days 576 0
  • பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் (Punjab and Maharastra Bank – PMC Bank) பொறுப்பினை ஏற்பதற்கான முன்மொழிதலுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
  • வங்கி அல்லாத கடன் வழங்கு நிறுவனமான சென்ட்ரம் நிதிச் சேவை நிறுவனம் மற்றும் நிதித் தொழில்நுட்பத் தொடக்க நிறுவனமான பாரத்பே ஆகியவற்றின் கூட்டமைப்பானது PMC வங்கியின் பொறுப்பினை ஏற்க உள்ளது.
  • PMC வங்கியினுடைய வீழ்ச்சியின் பின்னணியில் இந்த முடிவானது மேற்கொள்ளப் பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல்

  • ஒரு சிறு நிதியியல் வங்கியினை அமைப்பதற்காக சென்ட்ரம் நிறுவனத்திற்கு கொள்கை ரீதியிலான ஒரு ஒப்புதலை வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது.
  • இது வருடாந்திர உரிமம் வழங்கும் விதிமுறைகளின் கீழ் அமைக்கப்படும்.
  • வருடாந்திர உரிமம் வழங்கும் விதிமுறை என்பது வங்கிகளுக்குப் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் வழங்குவதற்குப் பதிலாக தொடர் உரிமம் வழங்குவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்