வயநாடு வனவிலங்குச் சரணாலயம் உட்பட நீலகிரி உயிர்க்கோளச் சரணாலய வனப் பகுதிகளில், சென்னா ஸ்பெக்டபிலிஸின் பரவலான வளர்ச்சியைத் தடுக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
இது அமெரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகளுக்குச் சொந்தமான ஒரு இலையுதிர் மரமாகும்.
இது குறுகிய காலத்தில் 15 முதல் 20 மீட்டர் வரை வளரும். இது பூக்கள் பூத்த பிறகு ஆயிரக்கணக்கான விதைகளை வெளியிடுகின்றது.
இது ஒரு ஆக்கிரமிப்பு இனமாகும்.
இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்புத் தரவுப் பட்டியலின் கீழ் “குறைந்த கவனம் கொண்ட இனம்” என வகைப்படுத்தப் பட்டுள்ளது.