வயநாடு வனவிலங்குச் சரணாலயத்தில் இருந்து நீலகிரி உயிர்க்கோளத்தில் உள்ள வன விலங்குகளின் வாழ்விடத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் சென்னா ஸ்பெக்டபிலிஸ், ஒரு அன்னிய ஆக்கிரமிப்புத் தாவரம் ஆகும்.
விரைவாக வளரும் இது நச்சு உயிர் வேதியியல் குணங்களைக் கொண்டுள்ளதால் இது நாட்டுத் தாவரங்களை வளரவிடாமல் தடுக்கிறது.
இது அப்பகுதியில் நிலவும் பன்முகத் தன்மையைக் குறைக்கிறது.
இது வெப்பமண்டல தென் அமெரிக்காவில் இருந்து வந்த ஒரு இலையுதிர் மரம் ஆகும்.
இம்மரத்தின் பிரகாசமான மஞ்சள் நிற மலர்கள் தேனீக்களுக்கு தேன் வழங்குகின்றனஎன்பதோடு மேலும் இது சீரழிந்த நிலங்களில் மீண்டும் மரம் வளர்க்கும் திட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது.