லட்சுமண் சுருதி இசை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்திர இசைத் திருவிழாவான சென்னையில் திருவையாறு என்ற நிகழ்வின் 14-வது பதிப்பைத் தமிழக முதல்வர் துவங்கி வைத்தார்.
இவ்விழாவில் தவில் இசைமேதையான பத்மஸ்ரீ A.K. பழனிவேலுவிற்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ‘இசையாழ்வார்’ விருதினை தமிழக முதல்வர் வழங்கினார்.
தங்கப் பதக்கத்தினைக் கொண்ட இவ்விருதானது சென்னையில் திருவையாறு விழாக் குழுவினரால் நிறுவப்பட்டதாகும்.
மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் நினைவாக அவரின் மெழுகு சிலையானது பத்மபூஷன் சரோஜா தேவியால் இந்நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டது.