TNPSC Thervupettagam

சென்னையில் பாதுகாப்புத் துறை கண்காட்சி

January 20 , 2018 2371 days 804 0
  • 2018ஆம் ஆண்டின் பாதுகாப்புத் துறை கண்காட்சி முதல் முறையாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது.
  • சர்வதேச அளவிலான இக்கண்காட்சியில் இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தற்கால நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்புக் கருவிகள் காட்சிக்கு வைக்கப்படும்.
  • இக்கண்காட்சியானது பாதுகாப்புத் துறை உபகரணங்கள் தயாரிப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதை வெளிப்படுத்தும் விதமாக அமையும்.
  • இந்திய பாதுகாப்புத்துறை கண்காட்சி (Def Expo) – தரைப்படை, கடற்படை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளை காட்சிப்படுத்த இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் கண்காட்சி ஆகும். இதற்கு முந்தைய கண்காட்சி கோவாவிலும்,  அதற்கு முன் தில்லியிலும் நடைபெற்றது.
  • தமிழ்நாடு பாதுகாப்புத் துறை சார்ந்த பல்வேறு தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.
  • ஆவடியில் இராணுவ பீரங்கிகள் தயாரிக்கும் தொழிற்சாலையும், ஆவடி மற்றும் திருச்சியில் போர் தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைந்துள்ளன.
  • இந்திய கப்பற்படைக்கும், கடலோர காவல் படைக்கும் கப்பல்களை கட்டும் L & T நிறுவனத்தின் காட்டுப்பள்ளி கப்பல் கட்டுந்துறை தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
  • இவ்வாறு தமிழ்நாட்டில் பாதுகாப்புத் துறைக்கு வலுவான உற்பத்தி சூழலும், கட்டமைப்பும் அமைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்