TNPSC Thervupettagam

சென்னையில் ப்ளூ டிராகன்கள்

December 26 , 2023 206 days 221 0
  • பொதுவாக ஆழ்கடல் பகுதிகளில் காணப்படும் இரண்டு விஷமுள்ள கடல்வாழ் உயிரினங்கள் சென்னையில் கண்டறியப் பட்டுள்ளன.
  • ப்ளூ சீ டிராகன்கள் (கிளாக்கஸ் அட்லாண்டிகஸ்), மற்றும் ப்ளூ பட்டன் (போர்பிடா போர்பிட்டா) எனப்படும் பாலிப்களின் குழுக்கள் பெசன்ட் நகர் கடற்கரையில் தென்பட்டுள்ளன.
  • பொத்தான் போன்ற வடிவங்களை ஒத்திருக்கும் ப்ளூ பட்டன் உயிரினம் ஒற்றை உயிரினங்கள் அல்ல, மாறாக அவை ஹைட்ராய்டுகள் எனப்படும் சிறிய வேட்டையாடி இனங்களின் குழுக்கள் ஆகும்.
  • ப்ளூ பட்டன்கள் பெரும்பாலும் ஜெல்லிமீனாக (இழுது மீன்) தவறாக அடையாளம் கொள்ளப் படுகின்றன.
  • ப்ளூ சீ டிராகன்கள் அதன் தனித்துவமானத் தோற்றத்திற்காக அறியப்படுகின்ற ஓர் அரிய ஆழ்கடல் வாழ் உயிரினம் ஆகும்.
  • கடல் உயிரினங்களின் ஒரு வகுப்பான கடல் அட்டைப்பூச்சி இனமான இது மிகப் பரந்த அளவிலான வண்ணங்கள் மற்றும் வடிவங்களைக் கொண்ட, உடல் மேலோடுகள் அற்ற மெல்லுடலிகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்