சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ExTeM மையம்
January 27 , 2025 27 days 56 0
சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ExTeM மையம் ஆனது, விண்வெளியில் உற்பத்தி செயல்முறைகளை மேற்கொள்வதற்கான புதியத் தொழில் நுட்பங்களில் பணியாற்றி வருகிறது.
இந்த மையம் விண்வெளியில் முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட கட்டிடங்கள், கனமற்ற உலோக நுரைமம் மற்றும் ஒளியிழைகள் போன்ற தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி நடத்தி வருகிறது.
இந்த மையம் ஆனது தண்ணீர் இல்லாமல் கற்காரை கட்டுமானம் போன்ற மாறுதல் மிக்க செயல்முறைகளையும் உருவாக்கி வருகிறது.
ExTeM (புவிக்கு அப்பாலான பகுதியில் உற்பத்தி செயல்முறை) பற்றிய இந்த ஆராய்ச்சி இந்தியாவின் ககன்யான் திட்டம் மற்றும் அதன் எதிர்கால நோக்கிலான விண்வெளி நிலையம் ஆகியவற்றினை வலுப்படுத்தும்.
இதன் நுண் ஈர்ப்பு விசை சூழல் உருவாக்க அமைப்பு ஆனது உலகின் நான்காவது பெரிய செயல்பாட்டுக் கோபுரம் ஆகும்.