TNPSC Thervupettagam

சென்னை சோழவரம் விமான தளம்

March 13 , 2019 2086 days 699 0
  • இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தைச் சேர்ந்த தற்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் சோழவரம் விமான தளத்தில் தனது முதலாவது கிழக்குக் கடற்கரையோர வான் கண்காணிப்பு மையத்தை இந்திய விமானப் படை அமைக்கிறது.
  • இது செயல்பாட்டிற்கு வந்தால் சோழவரத்தில் உள்ள வான் கண்காணிப்பு மையமானது தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய 2500 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கடற்கரையைப் பாதுகாப்பதற்கு விமானப் படைக்கு உதவிடும்.
  • இந்திய விமானப் படையானது இந்த மையத்தில் சில போர் வானூர்திகளை நிலை நிறுத்தவிருக்கிறது. இது போயிங் பி8ஐ-யின் (P8I) மூலம் கண்காணிப்பை மேற்கொள்கின்ற அரக்கோணத்தில் உள்ள இந்தியக் கடற்படை நிலையமான ஐஎன்எஸ் ராஜாளி என்ற தளத்திற்கு வலு சேர்த்திடும்.
  • இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் பிராந்திய இணைப்புத் திட்டத்தின் (UDAN) கீழ் சோழவரத்தில் ஒரு சிறிய விமான தளம் மேம்படுத்தப்பட இருக்கின்றது.
  • சோழவரம் விமானத் தளமானது இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்