தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் புதிய திடக் கழிவு மேலாண்மையைத் தொடங்கி வைத்துள்ளார்.
இந்தப் புதிய திடக் கழிவு மேலாண்மை முறையானது ஸ்பெயின்-இந்தியா கூட்டு முயற்சி மற்றும் அர்பேசர் எஸ்ஏ, சுமீத் வசதிகள் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப் படவுள்ளது.
இது 8 ஆண்டுகளுக்கு கழிவுகளைச் சேகரித்து, பின் அவற்றை அகற்றி அதனை மேலாண்மை செய்யும்.
இது முதல் நிலை சேகரிப்பு, இரண்டாம் நிலைச் சேகரிப்பு, போக்குவரத்து, தெருக்களைத் தூய்மை செய்தல், குப்பைகளைச் சேகரித்தல், சரியான முறையில் பராமரித்தல், குறைகளைக் களைதல் மற்றும் IEC (Information, education, and communication - தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு) ஆகியவற்றின் கீழ், 34 முக்கியச் செயல்பாட்டுக் குறிகாட்டிகளின் அடிப்படையில் கட்டணம் செலுத்தப்பட உள்ளது.