11 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையில் உள்ள பி.சி.ஜி தடுப்பூசி ஆய்வகமானது வணிகப் பயன்பாட்டிற்காக காசநோய் எதிர்ப்பு தடுப்பூசியின் பெருமளவிலான உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுள்ளது.
சிறந்த உற்பத்தி நடைமுறை (Good Manufacturing Practices - GMP) நெறிமுறைகளைப் பின்பற்றிய பின்னர் இது மீண்டும் திறக்கப் பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய நோய்த் தடுப்புத் திட்டத்திற்குத் தேவையான குறைந்தது 300 லட்சம் மருந்துகளை இந்த ஆய்வகம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
ஆய்வகத்தில் உள்ள விஞ்ஞானிகள் மைக்கோபாக்டீரியம் பொவிஸ் பி.சி.ஜி திரிபிலிருந்து ஒரு திரிபைப் பயன்படுத்துகின்றனர்.
இது தனியார் நிறுவனங்களை விட மிகக் குறைந்த விலையில் காசநோய் தடுப்பூசிகளை வழங்க இருக்கின்றது.
டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள ஸ்டேட்டன்ஸ் செரம் நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன் இந்த ஆய்வகமானது 1948 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.