TNPSC Thervupettagam

சென்னை - பெங்களூரு அதிவேக சாலை

February 5 , 2020 1812 days 764 0
  • சென்னை - பெங்களூரு அதிவேக சாலையின் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளார்.
  • இந்தத் திட்டமானது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் கூட்டு - வருடாந்திர மாதிரியின் (HAM - hybrid-annuity model) கீழ் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
  • எட்டு வழிச் சாலை கொண்ட இந்த அதிவேக சாலையானது கர்நாடகா (77 கி.மீ), ஆந்திரப் பிரதேசம் (91 கி.மீ), மற்றும் தமிழ்நாடு (94 கி.மீ) ஆகிய மாநிலங்கள் வழியாக செல்லும்.
  • இந்தத் திட்டத்தை பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ள இந்த நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
  • இந்தச் சாலையானது நாட்டின் மிகவும் நெரிசலான நெடுஞ்சாலைகளில் ஒன்றான தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை - 4க்கு (மும்பை – கோலார் – பெங்களூரு - சென்னை) இணையாக கட்டமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்