பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஜிஐஇசட் (GIZ) என்ற ஜெர்மன் நிறுவனம் 2 லட்சம் யூரோ மதிப்புடைய ‘தி டிரான்ஸ்பர்மேட்டிவ் அர்பன் மொபிலிட்டி இனிஷியேட்டிவ்’ (Transformative Urban Mobility Initiative) என்ற விருதை வழங்கியுள்ளது.
விருது வழங்கும் நிகழ்ச்சி ஜெர்மனியில் உள்ள லெய்ப்பிஸ் நகரில் அண்மையில் நடைபெற்றது.
சாலை வடிவமைப்பு திட்டத்துக்காக சென்னை மாநகராட்சிக்கு ஜெர்மனி நிறுவனம் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜிஐஇசட் என்ற நிறுவனம் சார்பில் ‘நகர்ப்புற போக்குவரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி’ என்ற விருதுக்கான போட்டி நடத்தப்பட்டது.
இந்த விருதுக்காக, சென்னை மாநகராட்சி சார்பில் ‘சாலைகளை எல்லா இயல்புகளையும் உள்ளடக்கி வடிவமைக்கும்பணி’ என்ற தலைப்பில் போட்டிக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.