TNPSC Thervupettagam

சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை 2024

February 23 , 2024 276 days 265 0
  • சென்னை பெருநகர மாநகராட்சிக் கழகத்தின் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையானது, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகக் குறைவான பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்டது.
  • வருவாய் வரவுகள் ஆனது, கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக பட்சமாக 4,464.60 கோடி ரூபாயாக இருந்தாலும், இந்த நிதியாண்டில் மூலதன வரவுகள் சிறிதளவு குறைவாக 3,455 கோடி ரூபாயாக உள்ளது.
  • கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பீடு ஆனது 3,554.5 கோடி ரூபாய் ஆக இருந்தது.
  • நகரில் உள்ள 419 தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டு ஜோடி சீருடைகள் வழங்கப் படும்.
  • மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 255 பள்ளிகளில் தலா நான்கு கண்காணிப்பு ஒளிப்படக் கருவிகள் பொருத்தப்படும்.
  • 208 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 130 நடுநிலைப் பள்ளிகளில் LKG முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு முதல் முறையாக ஒரு ஜோடி காலணிகள் மற்றும் இரண்டு ஜோடி காலுறைகள் வழங்கப்படும்.
  • நகரில் உள்ள அனைத்துத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் நகர சபை உறுப்பினர்கள் தலைமையிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப் படும்.
  • இடரில் உள்ள தாய்மார்கள் உதவி அழைப்பு அணுகல் மையங்கள் நகரில் அமைக்கப் படும்.
  • மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக 4 பேருந்துகளை மாநகராட்சி வாங்கும்.
  • நகரில் உள்ள 200 (வட்டாரங்களிலும்) வார்டுகளிலும் EmpowHER எனப்படும் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்