TNPSC Thervupettagam

சென்னை மாநகராட்சி மண்டலங்கள்

March 3 , 2025 7 hrs 0 min 22 0
  • பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 ஆக உள்ள மாநகர நிர்வாக மண்டலங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த தமிழக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • மக்கள்தொகை அடிப்படையில் வளங்களை சமமாக விநியோகிப்பதையும் அரசுச் சேவைகளை திறன்மிகு முறையில் வழங்குவதையும் இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்ததன் மூலம் GCC ஆனது 2011 ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டதன் மூலம் அதன் புவியியல் எல்லைகள் 426 சதுர கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில், சென்னையின் மக்கள் தொகை 66.72 லட்சமாக இருந்த நிலையில், தற்போது அது சுமார் 85 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • தற்போது, ​​சென்னை மாநகரம் ஆனது 15 மண்டலங்களாகவும் 200 வார்டுகளாகவும் பிரிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்