TNPSC Thervupettagam

செபி கண்காணிப்பின் கீழ் ஆரம்ப நாணய விடுப்புகள்

November 6 , 2017 2429 days 826 0
  • மூலதனச் சந்தை ஒழுங்குப்படுத்தியான செபி (SEBI – Secruirites and enchange Board of India) ஆரம்ப நாணய விடுப்புகளை (ICO – Initial Coin offering) தற்போதுள்ள தன்னுடைய சட்ட கட்டமைப்புக்குள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
  • தற்போது கிரிப்டோ கரன்சிகளின் பிரபலம் உயர்ந்து வரும் நிலையில், ஆரம்ப நாணய விடுப்புகளைப் பயன்படுத்தி நிதி திரட்ட முனையும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
  • மேலும் மத்திய வங்கியானது, இந்தப் பொருளாதாரக் கருவிகளை (instruments) பாதுகாப்பு பத்திரங்களாக (securities) நோக்குவதால், SEBI தான் ஒழுங்குப்படுத்தும் அமைப்பாக இருக்க முடியும் என்று எண்ணுகிறது.
  • ஆனால் பத்திர ஒப்பந்தங்கள் ஒழுங்குமுறைச் சட்டம் 1956-ன் [ Securities Contracts (Regulation) Act, 1956] கீழ் பிட்காயின்கள் என்பது ‘பத்திரங்களாகவும்’ (Securities) இல்லை ‘பொருட் பங்கும்’ (Commodity Derivatives) இல்லை.
சங்கேத இணையப் பணம்
  • சங்கேத இணையப் பணம் அல்லது மெய்நிகர் பணமானது ஒரு வகையான ஒழுங்குமுறைப் படுத்தப்படாத டிஜிட்டல் பணமாகும்.
  • பிட் காயின்கள் (Bit Coin) ஓர் உலகளாவிய சங்கேத இணையப் பணம் மற்றும் டிஜிட்டல் கட்டணப் பரிமாற்ற அமைப்பாகும். இவற்றைக் கட்டுப்படுத்தவும் ஒழுங்குமுறைப்படுத்தவும் எந்த மைய நிர்வாக அமைப்பும், மத்திய ஆணையமும் இல்லாததால் இவை உலகின் முதல் பரவலாக்கப்பட்ட டிஜிட்டல் பணமாகும். இவற்றினுடைய பரிவார்த்தனைகள் இணைய தொலைத் தொடர்பு பிணையங்களின் முனைய கணுக்களால் (Network Nodes) சரிபார்க்கப்பட்டு, தொடர்சங்கிலி (Block Chain) எனும் பொது விநியோகிப்பு பேரேட்டில் (Public distributed ledger) பதிவு செய்யப்படும். இவை ஓர் முக்கியமான Peer-to- Peer system என்ற அமைப்பாகும். மேலும் இவற்றின் பரிவர்த்தனை பயனாளர்களுக்கு இடையே எத்தகைய இடைத்தரகு அமைப்பும் இன்றி நேரடியாக மேற்கொள்ளப்படும்.
ஆரம்ப நாணயம் விடுப்புகள்
  • ஆரம்ப நாணய விடுப்புகள் (ICO-Initial Coin Offering) என்பது, ஆரம்ப பொது விடுப்புகளைப் (IPO) போன்றே டிஜிட்டல் வில்லை ஆகும். இதன் பின்பு சங்கேத இணையப் பணமாக (Crypto Currencies) மாற்றிக் கொள்ளலாம். இவை பெரும்பாலும் மெய்நிகர் நாணயங்களான பிட்காயின் மற்றும் யூத்தரம், பிளாக் செயின் போன்ற தொழில்நுட்பங்களைக் கையாளும் நிறுவனங்கள் நிதி திரட்டப் பயன்படுத்தப்படுகின்றன.
  • இந்த ICO ஆனது SEBI ஆல் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் IPO எனப்படும் ஆரம்ப பொது விடுப்பு போல் அல்ல. ஏனெனில் ICO வை கட்டுப்படுத்த இந்தியாவில் எந்த ஒழுங்கு முறைப்படுத்தும் அமைப்பும் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்