TNPSC Thervupettagam

செம்மரக் கட்டைகளின் ஏற்றுமதிக்கான ஒதுக்கீடு

August 10 , 2023 347 days 211 0
  • தமிழ்நாடு மாநிலத்தில் செயற்கையாக வளர்க்கப்பட்ட செம்மரக் கட்டைகளின் வருடாந்திர ஏற்றுமதி ஒதுக்கீட்டு அளவினை சுமார் 900 டன்களாக வர்த்தகத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வனத்தில் வளர்க்கப்படும் செம்மரங்களை ஏற்றுமதி செய்வதற்கு சுழிய அளவிலான ஒரு ஏற்றுமதி ஒதுக்கீட்டையும் அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • செம்மரம் என்பது கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே பரவிக் காணப்படும் ஓர் இந்திய வட்டார மர இனமாகும்.
  • இந்த மர இனமானது, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சில தனித்துவமான வளங்களைக் கொண்ட காடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு வட்டார இனமாகும்.
  • செம்மரங்கள் என்பது பொதுவாக செம்மண் மற்றும் வெப்பமான மற்றும் வறண்டப் பருவநிலை கொண்ட பாறை பாங்கான, வளமிழந்த மற்றும் தரிசு நிலங்களில் வளரும்.
  • மிகவும் மெதுவாக வளரும் மர இனமான இது இயற்கையாக வளரும் காடுகளில் 25-40 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்நிலையை அடையும்.
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) ஆனது, சமீபத்தில் அதன் செந்நிறப் பட்டியலில் செம்மரங்களை (அல்லது செஞ்சந்தனம்) மீண்டும் ‘அருகி வரும்’ இனங்களாக வகைப்படுத்தியுள்ளது.
  • இது 1972 ஆம் ஆண்டின் வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் IVவது அட்டவணையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • செம்மரங்களின் மிகப்பெரிய இறக்குமதியாளராக சீனா திகழ்கிற நிலையில்,  அதைத் தொடர்ந்து ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்