செம்மறி ஆடுகளில் விந்தணு செலுத்தல்களின் புதிய முறை
May 13 , 2018 2387 days 764 0
ராஜஸ்தான் மாநிலத்தின் அவிகாநகரில் அமைந்துள்ள மத்திய செம்மறி ஆடுகள் மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிஞர்கள் செம்மறி ஆடுகளின் இனப்பெருக்கத்திற்கு புதிய லாப்ராஸ்கோப் உதவியுடனான விந்தணு செலுத்தல் முறையைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த முறையானது சிறு கீறல் மூலமாக அடிவயிற்றுக்குள் கடினமான கண்ணாடி இழையிலான லாப்ராஸ்கோப்பை செலுத்தும் சிறிய ஊடுறுவல் தன்மை கொண்ட லாப்ராஸ்கோப் முறையாகும்.
இதன் உதவியுடன் கேமரா மூலம் செம்மறி ஆட்டின் இனப்பெருக்க பாதை குறிக்கப்பட்டு உறைந்த நிலையிலுள்ள விந்தணு கருப்பையில் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு பிறக்கும் செம்மறி ஆட்டுக் குட்டிகள் நீடித்த வாழ்வை (Survival) 60% வரை அடைய இந்த புதிய முறை உதவுகிறது.