TNPSC Thervupettagam

செம்மொழியாக அறிவிக்கப் படுவதற்கான நிபந்தனைகளில் மாற்றம் 2024

July 16 , 2024 133 days 210 0
  • இந்தச் சிறப்பு அந்தஸ்தினை வழங்குவதற்கான சில நிபந்தனைகளை மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • இந்தியாவில் தற்போது ஆறு செம்மொழிகள் உள்ளன – அவை தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகியனவாகும்.
  • இந்திய அரசானது, கடைசியாக 2014 ஆம் ஆண்டில்தான் இந்தச் சிறப்பு அந்தஸ்தினை (ஒடியா) வழங்கியது.
  • மராத்தி, வங்காளம், அசாமி மற்றும் மைதிலி போன்ற மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தற்போது சில மாநிலங்கள் மற்றும் இலக்கிய வட்டாரங்களில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.
  • இவற்றில் மராத்தி மொழிக்கான செம்மொழி அந்தஸ்து கோரிக்கை என்பது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்