குவால்காம் டெக்னலாஜிஸ் என்ற நிறுவனமானது உயர்மதிப்பு திறன்பேசிகளுக்கான உலகின் முதல் செயற்கைக் கோள் வழியான இருவழிச் செய்தியிடல் சேவையினை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது ஸ்னாப்டிராகன் செயற்கைக் கோள் என்று அழைக்கப்படுகிறது.
இது ஸ்னாப்டிராகன் 5G சேவை இணங்கி RF அமைப்பு மூலம் இயக்கப்படுகிறது.
ஸ்னாப்டிராகன் செயற்கைக்கோள் சேவையானது வரைப்பட்டிகைகள், வாகனங்கள், மடிக் கணினிகள் மற்றும் இணைய உலகம் (IoT) போன்ற பிற சாதனங்களுக்கான இணைப்பிற்காகவும் விரிவாக்கப்படலாம்.
நிலப்பரப்பு சாராத 5G வலையமைப்புக்களுக்கான (NTN) சேவையை வழங்குவதற்காக இந்த செயற்கைக் கோள் அமைப்பானது உருவாக்கப்பட்டது.