TNPSC Thervupettagam

செயற்கைக் கருத்தரிப்பு முறை தினம் – ஜூலை 25

July 29 , 2021 1127 days 323 0
  • ஜூலை 25 அன்று உலகம் முழுவதும் செயற்கைக் கருத்தரிப்பு முறை தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • மகப்பேறு மருத்துவத் துறையில் உருவாக்கப்பட்ட ஒரு மகத்தான கண்டுபிடிப்பினை நினைவு கூறும் வண்ணம் இந்த நாளானது கடைபிடிக்கப் படுகின்றது.
  • இங்கிலாந்தில் 1978 ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று லூயிஸ் பிரவுன் என்பவர் இந்த செயற்கை கருத்தரிப்பு முறையால் பிறந்தார்.
  • இந்தியாவில் டாக்டர் சுபாஷ் முகர்ஜி என்பவரும் செயற்கை கருத்தரிப்புப் பற்றிய ஆய்வுகளை செய்து வந்தார்.
  • லூயிஸ் பிரவுன் பிறந்த அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 03 அன்று கனுப்பிரியா அகர்வால் இந்த முறையின் மூலம் பிறந்தார்.
  • இந்தியாவின் முதலாவது செயற்கை கருத்தரிப்பு முறையில் பிறந்த அந்தக் குழந்தைக்கு டாக்டர் சுபாஷ் முகர்ஜி முதலில் துர்காஎனப் பெயரிட்டார், ஆனால் பின்னாளில் அவரது பெற்றோர்கள் அவருக்கு கனுப்பிரியா எனப் பெயரிட்டனர்.
  • இவர் இந்தியாவின் முதலாவது மற்றும் உலகின் 2வது செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் பிறந்த குழந்தை ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்