நிலத்தில் உள்ள சமிக்ஞை கோபுர உள்கட்டமைப்புகளின் அவசியமில்லாமல், நேரடியாக திறன் பேசி அழைப்புகளை செயல்படுத்தும் திறன் கொண்ட உலகின் முதல் செயற்கைக்கோளை சீன அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதற்கு "வானத்துடனான நேரடி இணைப்பு" என்று பொருள்படும் வகையில் "டியான்டோங்க்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பில் இடைவெளிகளை உருவாக்குவதை விட அந்த இடைவெளிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த முன்னெடுப்பு குறித்த கருத்தாக்கம் ஆனது விவிலியக் கதையில் உள்ள பாபேல் கோபுரம் என்ற கருத்தில் இருந்து பெறப்பட்டது.
தற்போது 36,000 கி.மீ. தொலைவில் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் மூன்று செயற்கைக் கோள்களை கொண்டுள்ள டியான்டோங்க்-1 செயற்கைக்கோள் தொடர் அமைப்பானது, ஆசியா-பசிபிக் பிராந்தியம் முழுவதிற்கும் பல்வேறு சேவைகளை வழங்குகிறது.
ஹூவாவே டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆனது கடந்த செப்டம்பர் மாதத்தில் செயற்கைக் கோள் அழைப்பு சேவைகள் இயங்கும் வகையிலான உலகின் முதல் திறன் பேசிகளை வெளியிட்டதையடுத்து இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றம் நன்கு பலனளித்தது.