எதிர்காலத்தில் தூய எரிசக்தியைப் பெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்கச் செய்வதற்காக சீனா தனது செயற்கைச் சூரியன் என்ற அமைப்பின் மீது ஒரு பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது.
சீனாவின் செயற்கைச் சூரியன் சமீபத்திய ஒரு வெற்றிகரமான பரிசோதனையில், அணுக்கரு இணைவு உலையானது அபரிதமாக, சுமார் 70 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை வெற்றிகரமாக இயங்கியது.
அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கென குறைவான ஆய்வுகளே மேற்கொள்ளப்பட்ட அணுக்கரு இணைவு முறையின் (nuclear fusion) சக்தியைப் பயன்படுத்தும் முயற்சியில் இந்த இயந்திரம் ஈடுபடுத்தப்படுகிறது.