ஐஐடி-குவஹாத்தி மற்றும் இம்பீரியல் கல்லூரி இலண்டன் ஆகியவை இணைந்து “செயற்கைத் தொடர்” அல்லது “செயற்கைப் பொருள் தொடர்” என்ற நானோ வகைப் பொருட்களை உருவாக்கியுள்ளன.
இந்தத் தொடரானது ஒளி உமிழும் இருமுனையத்தைப் பிரகாசமாக, ஆற்றல் திறனுள்ளதாக மற்றும் நீடித்த காலத்திற்குச் செயல்படும் தன்மை கொண்டதாக மாற்றுகின்றது.
செயற்கைத் தொடர் என்பது செயற்கைப் பொருட்களாக செயல்படும் குறிப்பிட்ட அமைப்பு கொண்ட ஒரு வரிசையாகும். இது மிகச்சிறந்த ஒளியியல் பண்புகளை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.