செயற்கை இனிப்பூட்டி சுக்ரலோஸ்
August 17 , 2024
98 days
152
- சிறிய அளவிலான சுக்ரலோஸ் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைப் பாதிக்காது என்று சமீபத்திய ஆய்வு குறிப்பிடுகிறது.
- உடல் எடை (BW), இடுப்பு சுற்றளவு (WC) மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (BMI) ஆகியவற்றில் சிறிது அதிகரிப்பினையும் இது கொண்டுள்ளது.
- சுக்ரலோஸ் மிகவும் பிரபலமான எந்த ஊட்டச்சத்தும் இல்லாத அல்லது செயற்கை இனிப்பூட்டி மற்றும் சர்க்கரைக்கான மாற்றுப் பொருளாகும்.
- ஊட்டம் நிறைந்த மற்றும் ஊட்டமில்லாத இனிப்பூட்டிகள் என இரண்டு வகையான இனிப்பூட்டிகள் உள்ளன.
- பிரக்டோஸ் போன்ற ஊட்டச் சத்து நிறைந்த இனிப்பூட்டிகள் கலோரிகளை மிகவும் அதிகரிக்கக் கூடியது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது அல்ல.
- சுக்ரலோஸ் நமது உடலின் வளர்சிதைமாற்ற செயலால் செயல்முறையாக்கப் படுவது இல்லை என்பதால் அது கலோரிகளை அதிகரிக்காது.
Post Views:
152