TNPSC Thervupettagam

செயற்கை ஒளிச்சேர்க்கை முறை

December 3 , 2022 597 days 505 0
  • திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்தூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை இணைந்து சூரிய மின் ஆற்றலைச் சேமிக்க உதவும் செயற்கை ஒளிச்சேர்க்கை முறையை உருவாக்கியுள்ளன.
  • ஒளிச்சேர்க்கையின் ஒரு சிக்கலான செயல்முறையைப் பிரதிபலிக்கும் வகையிலான இந்தத் தொழில்நுட்பத்தில் எதிர்கொள்ளப்படும் பல்வேறு சவால்களையும், அதே போல் ஒளி உட்கவர்பொருள் மற்றும் கடத்திகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய சிக்கல்களையும் இது தீர்க்கிறது.
  • இந்தப் புதியத் தொழில்நுட்பமானது சூரிய மின்கலங்களின் செயல்திறனை மேம்படுத்தவும் ஆற்றல் இழப்பைக் குறைக்கவும் உதவும் வகையிலான புதிய ஒளிச் சேர்க்கை கலன்களை வடிவமைக்க வழி வகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்