சீனாவானது சூரியனின் மையப்பகுதியின் வெப்பநிலையான 15 மில்லியன் டிகிரி செல்சியஸ்-ஐ விட ஆறு மடங்கு அதிகமான அளவில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டக்கூடிய செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளது.
சீனாவின் பிளாஸ்மா இயற்பியல் கல்வி நிறுவனத்தின் அறிவியலாளர்கள், செயற்கை சூரியன் என்றழைக்கப்படக்கூடிய சோதனைக்குட்படுத்தப்பட்ட மேம்பட்ட மீக்கடத்தியான டோகாமாக்கில் (Experimental Advanced Superconducting Tokamak-EAST) உள்ள பிளாஸ்மா ஆனது 100 மில்லியன் டிகிரி செல்சியஸை அடைந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இது பூமியில் அணுக்கரு இணைவு செய்யத் தேவையான அளவு வெப்பநிலையாகும்.
இந்த EAST உலையானது சூரியனில் ஹைட்ரஜன் ஆனது செலவு குறைந்த பசுமை ஆற்றலாக மாற்றப்படுவதில் உள்ள அதே செயல்பாடுகளை பிரதிபலிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்களால் அந்த நிலையை 10 வினாடிகளுக்கு மட்டுமே பராமரிக்க / நீட்டிக்க முடிந்தது.