TNPSC Thervupettagam

செயற்கை சூரிய கிரகணம் - ப்ரோபா 3

December 19 , 2024 28 days 139 0
  • ப்ரோபா-3 என்பதன் மூலம், ஐரோப்பிய விண்வெளி முகமை ஆனது இயற்கையான சூரிய கிரகணங்களுக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக புதிய இரண்டு செயற்கைக் கோள்களை ஒன்றிணைத்து செயற்கை சூரிய கிரகணத்தினை உருவாக்கியுள்ளது.
  • இந்தச் செயற்கை கிரகணம் ஆனது கரோனா எனப்படுகின்ற சூரியனின் வெளிப்புற மண்டலத்தை ஆய்வு செய்ய பயன்படுத்தப்பட உள்ளது.
  • சூரியனின் ஒரு வெளிப்புற அடுக்கான கரோனா என்பது இன்றும் சூரியனின் மிகவும் மர்மமான பகுதிகளில் ஒன்றாக உள்ளது.
  • சூரியனின் மேற்பரப்பு சுமார் 5,500°C வெப்பநிலையில் இருந்தாலும், இந்த கரோனா பகுதியின் வெப்பநிலை 1-3 மில்லியன் டிகிரி செல்சியஸ் வரை உயர்கிறது.
  • பொதுவாக, முழு சூரிய கிரகணத்தின் போது, நிலவானது சூரியனிலிருந்து வரும் சில ஒளிப் பிழம்புகளை தடுக்கும் என்பதால் சூரியன் முழுவதும் மறையும் போது கரோனா அடுக்குத் தெரியும்.
  • ஆனால், இந்த இயற்கை நிகழ்வுகள் அரிதாக மற்றும் குறுகிய காலத்திற்கு மட்டுமே நிகழ்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்