செயற்கை நுண்ணறிவின் உதவியுடனான மார்பக ஊடுகதிர் ஆய்வு (MASAI) சோதனை
August 9 , 2023 475 days 314 0
செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் ஆனது, மார்பக ஊடுகதிர் (மேமோகிராஃபி) சோதனையின் துல்லியத் தன்மையினை மேம்படுத்தும், ஆய்வுக் கண்டறிதலில் உள்ள ஒரு முக்கியப் பணிச் சுமையை நன்கு குறைக்கும் வகையிலான நம்பகமான முடிவுகளை வழங்குகின்றன.
இருப்பினும், கட்டுப்படுத்தப்பட்ட வெவ்வேறு பிரிவுகளுக்கான சம வாய்ப்பு சோதனை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
முதலாவது கட்டுப்படுத்தப்பட்ட வெவ்வேறு பிரிவுகளுக்கான சம வாய்ப்புச் சோதனையின் திட்டமிடப்பட்ட இடைக்காலப் பாதுகாப்புப் பகுப்பாய்வு ஆனது தேசிய மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்கிறது.
மார்பக ஊடுகதிர் ஆய்வு சோதனையை மிகவும் துல்லியமாகவும் திறன் மிக்கதாகவும் மாற்றுவதற்கான செயற்கை நுண்ணறிவின் திறனை இது குறிப்பிட்டுக் காட்டுகிறது.
ஸ்வீடனில் 80,000க்கும் மேற்பட்டப் பெண்களில் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால கண்டுபிடிப்புகள் செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் 20 சதவீதத்திற்கும் அதிகமான புற்றுநோய்ப் பாதிப்புகளைக் கண்டறிந்து உள்ளன.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடானது, தவறான நோய்ப் பாதிப்புக் கண்டறிதல் வாய்ப்புகள் அதிகரிக்க வில்லை (மார்பக ஊடுகதிர் ஆய்வு சோதனையானது நோய் பாதிப்பு உள்ளது என தவறான நோய் கண்டறிதல் அறிக்கையினை வழங்கியுள்ளது) என்பதோடு மார்பக ஊடுகதிர் ஆய்வு கண்டறிதலில் உள்ள பணிச் சுமையை 44% என்ற அளவிற்கும் குறைக்கிறது.
செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தி (AI) மேற்கொள்ளப்படும் மார்பக ஊடுகதிர் ஆய்வு ஆனது, வழக்கமான ஆய்வுகளுடன் ஒப்பிடும்போது ஐந்தில் ஒரு பங்கு மார்பகப் புற்றுநோய்களைக் கண்டறிந்தது.