TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவுச் சட்டம் (AI சட்டம், 2024)

March 21 , 2024 120 days 298 0
  • தொழில்நுட்ப முதலீட்டில் முன்னணியில் உள்ள நடுநிலையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை மேலாண்மை செய்வதற்கான உலகின் முதல் முக்கிய அடிப்படை ஒழுங்குமுறை விதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
  • ஒரு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமாக செயல்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்ட இந்தச் சட்டம், பிரச்சினையாக உள்ள செயற்கை நுண்ணறிவு தயாரிப்பின் அபாயத்தின் அடிப்படையில் பல்வேறு நிலை கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
  • இந்த நிலைகள் பின்வருமாறு:
  • ஏற்றுக் கொள்ள முடியாத ஆபத்து கொண்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகள்:
    • சமூகத் தரங்களை வழங்குதல், பயனரின் உணர்ச்சிகளை ஊகித்தல், ஏமாற்றும் உத்திகளை திணித்தல், குற்றம் செய்யும் நபரின் ஆபத்தை மதிப்பிடுதல் மற்றும் பயனர்களின் நிகழ்நேர உடலியல் அங்க அடையாளத் தரவை எடுத்தல்;
  • அதிக ஆபத்துள்ள AI அமைப்புகள்
    • ஒரு தனிநபரின் பணி செயல்திறன், பொருளாதார நிலை, உடல்நலம், இடம் பெயர்வு அல்லது மனித மதிப்பாய்வு இல்லாமல் முடிவெடுக்கும் முறைகள்; மற்றும்
  • பொது நோக்கத்திற்கான AI அமைப்புகள்-
    • Chat GPT போன்ற சுய-கண்காணிப்பு கொண்ட, அதிக அளவிலான தரவுகளில் தேர்ந்த பயிற்சி பெற்ற AI மாதிரிகள்.
  • ஏற்றுக் கொள்ள முடியாத ஆபத்து நிலை கொண்ட AI அமைப்புகளை இந்தச் சட்டம் தடை செய்கிறது.
  • இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்