தொழில்நுட்ப முதலீட்டில் முன்னணியில் உள்ள நடுநிலையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை மேலாண்மை செய்வதற்கான உலகின் முதல் முக்கிய அடிப்படை ஒழுங்குமுறை விதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
ஒரு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமாக செயல்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்ட இந்தச் சட்டம், பிரச்சினையாக உள்ள செயற்கை நுண்ணறிவு தயாரிப்பின் அபாயத்தின் அடிப்படையில் பல்வேறு நிலை கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
இந்த நிலைகள் பின்வருமாறு:
ஏற்றுக் கொள்ள முடியாத ஆபத்து கொண்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகள்:
சமூகத் தரங்களை வழங்குதல், பயனரின் உணர்ச்சிகளை ஊகித்தல், ஏமாற்றும் உத்திகளை திணித்தல், குற்றம் செய்யும் நபரின் ஆபத்தை மதிப்பிடுதல் மற்றும் பயனர்களின் நிகழ்நேர உடலியல் அங்க அடையாளத் தரவை எடுத்தல்;
அதிக ஆபத்துள்ள AI அமைப்புகள்
ஒரு தனிநபரின் பணி செயல்திறன், பொருளாதார நிலை, உடல்நலம், இடம் பெயர்வு அல்லது மனித மதிப்பாய்வு இல்லாமல் முடிவெடுக்கும் முறைகள்; மற்றும்
பொது நோக்கத்திற்கான AI அமைப்புகள்-
Chat GPT போன்ற சுய-கண்காணிப்பு கொண்ட, அதிக அளவிலான தரவுகளில் தேர்ந்த பயிற்சி பெற்ற AI மாதிரிகள்.
ஏற்றுக் கொள்ள முடியாத ஆபத்து நிலை கொண்ட AI அமைப்புகளை இந்தச் சட்டம் தடை செய்கிறது.
இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.