TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இருப்புப்பாதை கடப்பு முன்னெச்சரிக்கை அமைப்பு

February 14 , 2024 285 days 265 0
  • பயண இயக்கத்தில் உள்ள இரயில்களால் யானைகள் தாக்கப்படாமல் இருப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இது தமிழ்நாடு வனத் துறையால் அறிமுகம் செய்யப் பட்டது.
  • செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மற்றும் இயந்திரக் கற்றல் மூலம் இயக்கப் படும் இந்த அமைப்பு ஆனது, இரட்டை ஒற்றைக் கோட்டிற்கு அருகில் வரும் அல்லது தண்டவாளங்களைக் கடக்கும் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து எச்சரிக்கைகளை உருவாக்கும்.
  • நாட்டிலேயே இந்த வகையிலான முதல் வகை முன்னெச்சரிக்கை அமைப்பான இது சுமார் 7 கி.மீ. தொலைவிலான "அதிக எண்ணிக்கையில் யானைகள் பாதிக்கப்படக் கூடிய பகுதியில்" நிறுவப்பட்டுள்ளது.
  • இது கோயம்புத்தூர் பிரிவில் நடைமுறையில் உள்ளது.
  • நாளொன்றுக்கு சுமார் 130 இரயில்கள் A மற்றும் B இரயில் பாதைகள் வழியாகச் செல்கின்றன என்ற நிலையில் ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பாதைகளில் சுமார் 1,000 யானைகள் கடந்து செல்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்