TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு செயல்படுத்தப்பட்ட மின் மட்டை (Power Bat) -மைக்ரோசாப்ட்

October 16 , 2018 2104 days 640 0
  • முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான அனில் கும்ப்ளேவின் தொழில்நுட்பத் தொடக்கமான ஸ்பெக்டகாம் தொழில்நுட்ப நிறுவனமானது (Spektcom Technologies) “மின் மட்டையை” (Power Bat) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இம்மட்டையின் பட்டையில் உணர்வியுடன் கூடிய எடை குறைவான ஒட்டுப்படத்துடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இந்த மின்மட்டை மைக்ரோசாப்டின் அசூர் க்ளவுட் தளம், அதன் செயற்கை நுண்ணறிவு மற்றும் பொருள்களுக்கான இணையச் சேவைகள் ஆகியவற்றின் (IOT – Internet Of Things) மூலம் இயக்கப்படுகிறது.
  • இது மைக்ரோசாப்டின் அசூர் ஸ்பியர் இயங்கு முறையில் செயல்படுத்தப்படுகிறது.
  • மட்டையின் வேகம் மற்றும் செலுத்து தரம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு விளையாட்டு வீரரின் நிகழ்நேரத் திறன் குறித்த தகவலை இந்த “மின் மட்டை” அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்