செயற்கை நுண்ணறிவு மீதான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம்
March 29 , 2024 240 days 317 0
ஐக்கிய நாடுகள் சபையின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதல் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அங்கீகரித்துள்ளது.
இந்தத் தீர்மானமானது இந்த ஆற்றல் வாய்ந்த புதிய தொழில்நுட்பம் ஆனது அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கிறது என்பதையும், மனித உரிமைகளை மதிக்கிறது என்பதையும், "பாதுகாப்பானது, காப்புறுதி கொண்டது மற்றும் நம்பகமானது" என்பதையும் உறுதி செய்வதற்கான சர்வதேச முயற்சிக்கு உலக நாடுகளின் ஆதரவை வழங்குகிறது.
இந்த ஆற்றல் வாய்ந்த வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் மேம்பாடு மற்றும் பயன்பாட்டிற்கான முதல்-வகையான உலகளாவிய அணுகுமுறை இதுவாகும்.
பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களைப் போலன்றி, பொதுச் சபைத் தீர்மானங்கள் சட்டப்பூர்வ பிணைப்பினை (செயல்படுத்துவதற்கான கட்டாயம்) கொண்டி இருப்பதில்லை, ஆனாலும் அவை உலக நாடுகளின் கருத்தினைப் பெறுவதற்கான ஒரு கருவியாக உள்ளன.