TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கிரகங்கள் கண்டுபிடிப்பு

March 30 , 2019 2068 days 643 0
  • ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து கெப்ளர் விண்வெளி தொலை நோக்கியின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களிலிருந்து இரண்டு மறைந்துள்ள கிரகங்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • இவர்கள் பாரம்பரிய கிரகக் கண்டுபிடிப்பு முறைகளால் கண்டுபிடிக்க முடியாமல் தவறியதன் சமிக்ஞைகளைக் கண்டுபிடிப்பதற்காக கெப்ளரிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு, அவற்றை கண்டுபிடிப்பதற்கான ஒரு நெறிமுறையை உருவாக்கியுள்ளனர்.
  • கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு புதிய கிரகங்கள் அகுரியஸ் விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ளன.
  • இந்த இரண்டு கிரகங்களும் K2-293b மற்றும் K2-294b என்ரு பெயரிடப்பட்டுள்ளன. அது நமது சூரிய மண்டலத்திலிருந்து முறையே 1300 மற்றும் 1230 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையினால் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்