TNPSC Thervupettagam

செயற்கை மணல் தொடர்பான கொள்கை

March 15 , 2023 495 days 274 0
  • தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் செயற்கை மணல் குவாரிகளை (எம்-சாண்ட் என பிரபலமாக அழைக்கப்படும்) ஒழுங்குமுறைப் படுத்தச் செய்வதற்காக தமிழக அரசு ஒரு புதிய கொள்கையை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • கட்டுமானப் பொருட்களின் கலவையாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை நொறுக்கப் பட்ட மணலான செயற்கை மணலின் தரத்தை மேம்படுத்துவதையும், மணல் குவாரிகளை ஒழுங்குமுறைப் படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • செயற்கை மணல் மற்றும் சரளை மணல் உற்பத்தி அலகுகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கான ஒற்றைச் சாளர இணைய தளம் மற்றும் மையப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு ஆகியவற்றினை அரசு நிறுவ உள்ளது.
  • இந்தப் புதிய கொள்கையின்படி, குவாரி உரிமையாளர்கள் தங்கள் உரிமங்களுக்கு விரைவான அனுமதி பெறுவதை உறுதி செய்யும் வகையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பொதுப் பணித்துறை, சுரங்கங்கள் மற்றும் பிற துறைகள் ஆகியவை ஒரு தளத்தில் இணைக்கப்படும்.
  • தற்போது, மாநிலத்தில் 378 உரிமம் பெற்ற சரளை மணல் உற்பத்தி அலகுகள் உள்ளன.
  • இந்தப் புதிய கொள்கையின் படி, அனைத்து சரளை மணல் ஆலைகளும், 1948 ஆம் ஆண்டுத் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் தொழில்துறைப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • செயற்கை மணல் அல்லது சரளை மணல் என்பது குவாரிப் பாறைக் கற்களை மணல் அளவிலான துகள்களாக நொறுக்குவதன் மூலம் தயாரிக்கப் படுகிறது.
  • பிரத்தியேகமாக செயற்கை மணல் உற்பத்தி செய்வதற்காக மட்டுமே என்று எந்த குவாரிக்கும் குத்தகை வழங்கப் படாது என்றும் இந்தக் கொள்கை கூறுகிறது.
  • ஒட்டு மொத்தமாக, இந்தப் புதியக் கொள்கையானது, தமிழகத்தில் செயற்கை மணல் தொழில் துறையில் அதிக அளவிலான ஒழுங்குமுறை மற்றும் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இதில் செயற்கை மணல் உற்பத்தி அலகுகள் இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப் பட்டு உள்ளன. அவை
    • செயல்பாட்டில் உள்ள கல் குவாரிக் குத்தகைகளை வைத்திருக்கும் நபர்கள் தான் சொந்தமாக இயக்குகின்ற ஒருங்கிணைந்த அலகுகள்.
    • செல்லுபடியாகும் கல் குவாரிக் குத்தகைகளைக் கொண்டிருக்காத நபர்களால் இயக்கப் படும் தனி அலகுகள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்