TNPSC Thervupettagam

செயல்திறன் அடிப்படையிலான வழிசெலுத்தல் அமைப்பின் செயல்விளக்கம்

June 11 , 2023 408 days 262 0
  • மும்பையில் ஜூஹூவில் இருந்து புனே வரை பயணிக்கும் ஹெலிகாப்டர்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான வழிசெலுத்தல் அமைப்பின் செயல்விளக்கத்தினை ஆசியாவிலேயே முதல் முறையாக இந்தியா மேற்கொண்டது.
  • GAGAN செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி இந்த செயல் விளக்கம் என்பது மேற்கொள்ளப்பட்டது.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் ஆகியவை இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தினை உருவாக்கியுள்ளன.
  • அதிக துல்லியத் தன்மையினை வழங்கச் செய்கிற வகையில் சர்வதேசப் புவியிடங் காட்டி உதவியுடன் இயங்கும் புவிநிலைச் சுற்றுப்பாதை மிகையாக்கம் சார்ந்த வழி செலுத்தல் தொழில்நுட்பம் (GAGAN) என்பது ஓர் அதிநவீன விண்வெளிச் சார்ந்த மிகை ஆக்க அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்