TNPSC Thervupettagam

செயல்படும் மருந்துப் பொருட்கள் (API)

April 30 , 2020 1674 days 745 0
  • இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனமானது (IICT - Indian Institute of Chemical Technology) இந்தியாவிற்குள் செயல்படும் மருந்துப் பொருட்களைத் (API - Active Pharmaceutical Ingredients) தயாரிப்பதற்காக லாக்ஸை வாழ்க்கை அறிவியல் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
  • இது மருந்துத் துறையில் சீனாவின் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கு உதவ இருக்கின்றது.
  • APIகள் மொத்த மருந்துகள் என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இது உளங்கொல் (நோக்கம் கொண்டுள்ள) விளைவுகளை உருவாக்கும் மருந்துகளின் ஒரு முக்கியப் பகுதியாக விளங்குகின்றது.
  • உலகில் APIயின் உற்பத்தியில் 3வது மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும்.
  • இந்தியாவில் பயன்படுத்தப்படும் APIயில் மூன்றில் 2 மடங்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப் படுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்திய அரசு API தொழிற்துறையைப் புதுப்பிப்பதற்காக வேண்டி மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குநரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருந்தது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்