இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனமானது (IICT - Indian Institute of Chemical Technology) இந்தியாவிற்குள் செயல்படும் மருந்துப் பொருட்களைத் (API - Active Pharmaceutical Ingredients) தயாரிப்பதற்காக லாக்ஸை வாழ்க்கை அறிவியல் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இது மருந்துத் துறையில் சீனாவின் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கு உதவ இருக்கின்றது.
APIகள் மொத்த மருந்துகள் என்றும் அழைக்கப் படுகின்றது.
இது உளங்கொல் (நோக்கம் கொண்டுள்ள) விளைவுகளை உருவாக்கும் மருந்துகளின் ஒரு முக்கியப் பகுதியாக விளங்குகின்றது.
உலகில் APIயின் உற்பத்தியில் 3வது மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும்.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் APIயில் மூன்றில் 2 மடங்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப் படுகின்றது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்திய அரசு API தொழிற்துறையைப் புதுப்பிப்பதற்காக வேண்டி மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குநரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருந்தது.