77வது சுதந்திரத் தின விழாவை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டைச் சுவர் மற்றும் கொடிக்கம்பம் ஆகியவற்றினை மாநில அரசு புதுப்பித்து வருகிறது.
148 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பமானது சுதந்திரத்தின் போது நாட்டிலேயே மிக உயரமானதாக இருந்தது.
1640 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்ட கோட்டைக்குள் அமைந்த முதல் வர்த்தக மையம் என்பதால் புனித ஜார்ஜ் அவர்களின் பெயரால் இந்தக் கோட்டைக்கு இந்தப் பெயரிடப்பட்டது.
இது 1774 ஆம் ஆண்டில், கல்கத்தா அரசாங்கத்தின் தலைமையிடமாக அறிவிக்கப் படும் வரை கிழக்கிந்தியக் கம்பெனியின் முக்கியக் குடியேற்றமாக இது இருந்தது.
1974 ஆம் ஆண்டு வரை இந்தக் கோட்டையில் ஆளுநர்களால் தேசியக் கொடி ஏற்றப் பட்டது.
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் சுதந்திரத் தின விழாவில் முதல்வர்கள் கொடியேற்றுவதற்கான உரிமையை வழங்க செய்யுமாறு வேண்டி மத்திய அரசினை வலியுறுத்தினார்.