TNPSC Thervupettagam

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டத்தின் நீட்டிப்பு

October 15 , 2024 70 days 103 0
  • 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை செறிவூட்டப்பட்ட அரிசியினை இலவசமாக வழங்கும் திட்டத்தினை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன் நோக்கம் "இரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வது" ஆகும்.
  • செறிவூட்டல் என்பது "உணவின் மீதான ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்துவதற்கும், ஆரோக்கியத்திற்கு ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதுடன் கூடிய பொது சுகாதார சேவைகளை வழங்குவதற்கும் ஒரு உணவில் உள்ள அத்தியாவசிய நுண்ணூட்டச் சத்துக்களின் உள்ளடக்கத்தை வேண்டுமென்றே அதிகரிப்பது" என வரையறுக்கப் படுகிறது.
  • ஒரு கிலோகிராம் செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச்சத்து (28 மைக்ரோகிராம்-42.5 மைக்ரோ கிராம்), ஃபோலிக் அமிலம் (75-125 மைக்ரோகிராம்) மற்றும் வைட்டமின் B-12 (0.75-1.25 மைக்ரோகிராம்) இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்