நாகப்பட்டினம் மற்றும் கடலூரில் உள்ள துறைமுகங்களைச் செயல் திறம் மிக்க மற்றும் செலவு குறைந்தச் செயல்பாடுகளுக்கு பயன்படுத்துமாறு ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், முகவர்கள் மற்றும் கப்பல் உரிமையாளர்கள் ஆகியோர் நன்கு ஊக்குவிக்கப் படுகின்றனர்.
சுங்கம், குடியேற்றம் மற்றும் துறைமுக சுகாதாரச் சேவைகள் உள்ளிட்ட தேவையான வசதிகளுடன் கூடிய இந்தத் துறைமுகங்கள் ஆனது, நெறிப்படுத்தப்பட்டச் சரக்குப் போக்குவரத்துச் செயல்பாடுகளுக்கு உதவுகின்றன.
இந்தத் துறைமுகங்கள் ஆண்டிற்கு சுமார் 75,000 டன்கள் வரையிலான வேளாண்மை, மீன்வளம் மற்றும் நுகர்வோர் பொருட்களின் இறக்குமதி ஏற்றுமதிகளைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளன.