TNPSC Thervupettagam

செலினா ஜான் வழக்கு

February 29 , 2024 273 days 333 0
  • பெண் ஊழியர்கள் திருமணம் செய்து கொள்வதற்காக தண்டனை விதிக்கும் விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • மேலும் எட்டு வாரங்களுக்குள் திருமதி ஜானுக்கு 60 இலட்சம் ரூபாயினை இழப்பீடாக வழங்குமாறு மத்திய அரசுக்கு அது உத்தரவிட்டுள்ளது.
  • இராணுவ செவிலியர் பணியின் (MNS) நிரந்தர ஆணைய அதிகாரி (படைப்பிரிவின் நிலையான பணி நிலைப் பெற்றவர்) முன்னாள் லெப்டினன்ட் செலினா ஜான் 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இராணுவப் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
  • அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர் திருமணம் செய்து கொண்டார் என்பதற்காகவும், வருடாந்திர இரகசிய மதிப்பீட்டு அறிக்கையில் (ACR) குறைந்த மதிப்பெண் பெற்றதாகவும் கூறி அவர் பணி நீக்கப்பட்டதாக அந்த உத்தரவில் கூறப் பட்டது.
  • 1977 ஆம் ஆண்டில் இராணுவ விதிமுறைகளில் சேர்க்கப்பட்ட விதியின் படி , "இராணுவ செவிலியர் பணி நீக்கம்" ஆனது ஒருவர் அந்தப் பணிக்குத் தகுதியற்றவர் என்று மருத்துவக் குழு அளிக்கும் அறிக்கை, திருமணம் செய்து கொள்வது மற்றும் தவறான நடத்தை ஆகிய மூன்று காரணங்களால் மேற்கொள்ளப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்