இஸ்ரோவின் முன்னாள் தலைவரான S. கிரண் குமாருக்கு பிரான்சின் உயரிய விருதான “செவாலியர் டி 1 ஆர்டிரி நேஷனல் டி லா லீஜியன் லா ஹானியர்” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்தியா – பிரான்சு விண்வெளி ஒத்துழைப்பிற்கு தான் ஆற்றிய பங்களிப்பிற்காக இவர் இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த விருதானது 1802 ஆம் ஆண்டு நெப்போலியன் போனபர்ட்டால் உருவாக்கப்பட்டது.
இது பிரான்சு நாட்டிற்கு தலைசிறந்த சேவையை அளித்தவர்களுக்காக பிரான்சு அரசினால் வழங்கப்படும் ஒரு உயரிய குடிமக்கள் விருதாகும்.
விருதைப் பெறுபவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருப்பினும் அவருக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது.