TNPSC Thervupettagam

செவ்வாய்க் கிரகத்தில் ஆக்ஸிஜன்

September 13 , 2023 440 days 271 0
  • பெர்சீவரன்ஸ் உலாவி விண்கலத்தின் உதவியுடன் நாசா விண்வெளி நிறுவனத்தினால் மேற்கொள்ளப் பட்ட ஆக்சிஜன்-உருவாக்கப் பரிசோதனையானது மிக வெற்றிகரமாக தனது பணியை முடித்து செவ்வாய்க் கிரகத்தில் ஆக்ஸிஜனை உருவாக்கியுள்ளது.
  • இது MOXIE (செவ்வாய்க் கிரகத்தில் இடம் சாரந்த ஆக்சிஜன் வளப் பயன்பாட்டு சோதனை) எனப்படும் நுண்ணலை கதிர்வீச்சு-அடுப்பின் அளவிலான சாதனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
  • MOXIE என்பது 2021 ஆம் ஆண்டில் அந்தக் கிரகத்தில் தரை இறங்கியதில் இருந்து பெர்சீவரன்ஸ் உலாவிக் கலத்தில் ஆக்ஸிஜனை உருவாக்கி வருகிறது.
  • மொத்தம் 122 கிராம் ஆக்சிஜனை உற்பத்தி செய்து, நிறுவனத்தின் உற்பத்தி இலக்கு சார்ந்த எதிர்பார்ப்புகளை விஞ்சியுள்ளது.
  • இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் 98% அளவு தூய்மையானது அல்லது சிறந்தது என்ற நிலையில் இது எரிபொருள் மற்றும் சுவாச பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப் பட ஏற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்